திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.! தனியார் மருத்துவமனையில் அனுமதி.!!

4 August 2020, 5:19 pm
Tirupur Govt Hospital Doctor Corona - Updatenews360
Quick Share

திருப்பூர் : அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிவரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இதனிடையே அரசு தலைமை மருத்துவமனைக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் காரணமாக தொற்று பரவாமல் இருக்க அவர் பணியாற்றி வந்த வார்டு முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

அதோடு அவருடன் பணியாற்றி வந்த செவிலியர்கள் சிலரும் மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதோடு, திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவர் நடத்தி வந்த க்ளினிக், அவர் குடியிருந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

Views: - 1

0

0