திராவிட பாராம்பரியத்தை காண்பித்த ஸ்டாலினுக்கு கண்டனம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்
22 August 2020, 1:03 pmதிருப்பூர் : திமுக தலைவர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்தூள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலையை வழிபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த அவர், விநாயகர் சதுர்த்திக்கு குரல் கொடுத்த பாஜக மாநில தலைவர் முருகன், கொங்கு பேரவை மாநில தலைவர் ஈஸ்வரன் மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கின்றது.
முதல்வர், ஜி.கே.வாசன், சரத்குமார், பாஜக தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்களான திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வில்லை இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
பல எதிர்ப்பு பிரச்சாரங்களை முறியடித்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இன்று மாலை நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். சட்டத்தை மதிப்போம். என தெரிவித்தார். உடன் மாநில நிர்வாகிகள் கிஷோர்குமார், சேவுகன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.