கம்பீரமான காங்கேயம் காளை அழியும் அபாயம்.! மாமிசத்திற்கு விலை போகும் மாடுகள்.!!

11 August 2020, 12:41 pm
Kangeyam Bulls - Updatenews360
Quick Share

திருப்பூர் : கம்பீரத்தின் அடையாளமான காங்கேயம் காளைகளை பாதுகாக்க வேண்டியும் மாமிசத்திற்க்கு மாடுகளை அண்டை மாநிலத்திற்கு செல்வதை தடுக்க சந்தைகள் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பழைய கோட்டை சந்தையில் விவசாயிகள்  பயன்பெறும் வகையில்  மாட்டு சந்தை மற்றும் காளை சந்தை நடைபெறுவது வழக்கம் . கடந்த 6 மாதங்களாக கொரானோ நோய் தொற்று பரவலை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடும் பகுதியான சந்தைகள் , கோவில்கள் , பேருந்து நிலையங்கள் என அனைத்தையும் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கையாக நிறுத்திவைத்தனர்.

பின்னர் பொதுமக்களின் நலன் கருதி அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு காய்கறி கடைகள்,  சந்தைகள்  மட்டும் விலக்கழிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது .இதனால் பலதரப்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளை வைத்து பயன்பெறும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் கால்நடை சந்தைகள் செயல்படாததால் புகழ் பெற்ற காங்கேயம் காளை மற்றும் மாட்டு இனங்களை மாமிசத்திற்கு அண்டைமாநிலத்திற்கு இடைத்தரகர் மூலம் விவசாயிகள் விற்பனை செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும்  இதை தடுக்க தமிழக முதல்வரும் , துணை முதல்வரையும் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரையும் சந்தித்து கால்நடை சந்தை பாதுகாப்பான முறையில் நடை பெற உரிய அனுமதி பெறப்போவதாக கொங்கு கோசாலை உரிமையாளர்கள் மற்றும் பாளையக்கோட்டை மாட்டுத்தாவணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கொங்கு மண்டலத்தில் 15ற்கும் மேற்பட்ட சந்தைகள் செயல்படாமல் உள்ளதாகவும் இவைகளை செயல்பாட்டிற்கு வந்தால் சமூக இடைவெளியுடன் முகக்கவசங்கள் அணிந்து உரிய பாதுகாப்புடன் நடத்த போவதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த 6 மாதங்களாக சந்தைகள் நடைபெறாததால் மாடு மற்றும் காளைகளை விவசாயிகள் குறைந்தவிலையில் இடைத்தரகள் மூலம் மாமிசத்திற்கு விற்பனை செய்கின்றனர் என்றும் இதனால் புகழ் பெற்ற காங்கேயம் மாட்டு இனம் அழிவில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் சிலமாதங்களுக்கு முன்னர் 200 ரூபாய்க்கு விற்ற மாட்டு இறைச்சி தற்போது 450 ரூபாயிற்கு விற்பதாகவும் இதனால் இடைத்தரகர்கள் மற்றும் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் மட்டுமே இரட்டிப்பு லாபம் அடைந்ததாதாகவும் தெரிவிகிக்கின்றனர். உடனடியாக தமிழக அரசும் கால்நடை பராமரிப்பு துறையும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அழிவின் விழிப்பில் இருக்கும் புகழ்பெற்ற காங்கேயம் மாட்டு இனங்களை காக்க முடியும் என்கின்றனர்.

Views: - 6

0

0