தண்ணீரே பார்க்காத அணை.! 20 வருடங்களுக்கு பிறகு வழிந்தோடும் அதிசயம்.! அமைச்சருக்கு குவியும் பாராட்டு!

11 August 2020, 1:39 pm
Dam Water - Updatenews360
Quick Share

திருப்பூர் : காங்கேயம் அருகே சின்ன முத்தூர் தடுப்பணையிண் வழியாக வீணாக கடலுக்கு செல்லும் மழைவெள்ள நீரை தடுத்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியதால் அணையில் நீர் வருவதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகிறது நொய்யல் ஆறு. இது  சங்க இலக்கியங்களில் பாடல்பெற்ற காஞ்சிமா நதி என்னும் பெயருடையது. நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் உருவாகி திருப்பூர் மாவட்ட வழியாக  வந்து  ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி  ஆற்றில் கலக்கிறது .

இந்த ஆற்று நீரை திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருப்பூர் மாவட்ட காங்கேயம் அருகே ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டு நொய்யல் ஆற்று நீர் தேக்கப்பட்டது. இந்த ஆணை நீரில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் 500 ஏக்கரும் கரூர் மாவட்டம் பரமத்தி யூனியனில் 19.500 ஏக்கரும் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே சின்னமுத்தூர் என்ற பகுதியில் நொய்யல் ஆற்றை தடுத்து நடுவே தடுப்பணை கட்டப்பட்டது  .

இந்த தடுப்பணையின் அருகே பிரத்தேயமாக கால்வாய் அமைக்கப்பட்டு அதன்முலம் நொய்யல் ஆற்றின் நீரை எடுத்து சென்று கரூர் மாவட்டம் பரமத்தி யூனியனில் உள்ள ஆத்துப்பாளையத்தில்  அணை கட்டப்பட்டு அங்கு  தேக்கப்பட்டது . இந்த அணையில்  தேங்கும் நீர்மூலம்  அப்பகுதியில் உள்ள 19.500 ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்தது .

இந்நிலையில் திருப்பூர் சாய ஆலை நீரை இந்த அணையில் விடக்கூடாது என்று  விவசாயிகள்  வழக்கு தொடர்ந்தனர்.  உயர்நீதிமன்ற ஆணைப்படி சாயநீர் ஆத்துப்பாளையம் அணையில் தேக்கப்படாமல் தடுக்கப்பட்டது . இந்நிலையில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் சாயமேற்றும்  ஆலைகள் ஜீரோ டிஸ்ஜார்ஜ் முறையில் சாயநீரை சுத்தப்படுத்தி வருவதால் மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் சுத்தமான தண்ணீர் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஆத்துப்பாளையம் அணையை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீருக்கே வழியின்றி பொதுமக்கள்  அவதிப்பட்டு வந்த வேளையில் இந்த அணை நிரம்புவதால் குடிநீர் பிரச்சனைக்கு நிறத்தர தீர்வு கிடைப்பதுடன் விவசாய நிலங்களும் விவசாயமும் மேம்படும் என்கின்றனர். தண்ணீருக்காக பல மயில் தூரம் சென்று எடுத்துவந்த வேளையில் தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக தங்கள் பகுதி அணை 20 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் வருவதுடன் அணை முழுவதும் நிரம்பும் நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

சின்ன முத்தூர் தடுப்பணை வழியாக காவிரியில் சென்று கலக்கும் நொய்யலாற்று நீரை, ஆத்துப்பாளையம் அணைக்கு திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்  கடந்த 2019 செப்டாம்பர் மதம் 17ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து விரைவில் முதல்வர் கவனத்திற்கு எடுத்து கூறி  வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு அணைக்கு தண்ணீர் தேக்கப்படும் என தெரிவித்திருந்த வேளையில் தற்போது 11 மாதங்கள் ஆன நிலையில் இந்த அணை நீர் நிரப்புவது குறிப்பிடத்தக்கது.