திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
அந்த நிலத்திற்கு செல்லும் 12 அடி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அந்தப் பாதையை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், வட்டாட்சியர் பானுமதி தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. வீரக்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர் வரும் வரை அளவீடு செய்யக்கூடாதெனவும் அவரது உறவினர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த உறவினர் கனகராஜை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் பூச்சி மருந்தை அருந்த முயன்ற செல்வராணியையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் பாதையை மீட்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து வீரக்குமார் நிலத்தை அளவீடு செய்ய அவர்கள் நிபந்தனையின் படி 5 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.