திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன இளம் தம்பதியினர் தற்கொலை : திருப்பூர் அருகே அதிர்ச்சி!!

Author: Udayachandran
4 October 2020, 1:11 pm
Couples Suicide - Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியை சார்ந்த இளம் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அஜீத்குமார் மற்றும் முத்துலட்சுமி தம்பதியினர் பூலாங்கிணறு பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 1 அரை வருடம் முன்பாக இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டைவிட்டு நீண்ட நேரம் வெளியே வராத காரணத்தால் அருகில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்து உடனடியாக உடுமலை காவல்துறையினருக்கு தகவல் அளித்த்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக உடுமலை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் இளம்தபதிகள் உடல்நலக்கோளாறு காரணமாக தூக்கிட்டிருக்கலாம் என சந்தேகித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

Views: - 66

0

0