நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!!

5 August 2020, 2:39 pm
Tirupur Npyyal - Updatenews360
Quick Share

திருப்பூர் : கனமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு கவனத்துடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றின் கரையோர பகுதிகளான பெத்திசெட்டிபுரம், அணைமேடு பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரை கவனத்துடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கும் அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளில் வெள்ளம் நீர்வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.