சிவன் மலையில் பிடிபட்ட அரியவகை “மரநாய்“!!

24 August 2020, 5:21 pm
Viveredds- Updatenews360
Quick Share

திருப்பூர் : சிவன் மலை அருகே அரியவகையான மரநாய் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை. சிவன்மலை கிரிவலப்பாதையில் செல்லும் போது வித்தியாசமான ஒளியை எழுப்பி அரியவகை விலங்கினம்  இருப்பைதை  பார்த்துள்ளனர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் இவை அரியவகை  இனத்தை சார்ந்த  மரநாய் ஆகும் எனவும் .இதன் வயது 2 லிருந்து 3 இருக்கலாம் என்றனர். மரநாய் பிடிபட்ட இடத்தில் நாகபழம் (எ) நாவல் பழம் மரம் இருந்தது. இதனால் மரத்தில் உள்ள பழங்களை சாப்பிட வந்திருக்கலாம் என்கின்றனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அறியவகையான மரநாய் ஊதியூர் பகுதில் உள்ள காப்புக்காட்டில் விடப்படும் என தெரிவித்த வனத்துறையினர்.

2008 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இவை அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்தனர். பறவைகளையும் எலிகள் ஆகியவைகளை உண்டுவாழும் பாலூட்டி வகையை சார்ந்தது ஆகும்.

மரநாய்கள் மூன்றுவகையில் உள்ளது என்றும் நிலா வால் மரநாய் , குட்டை வால் மரநாய் ,மிக சிறிய வால் மரநாய் உள்ளதாகவும் தெரிவித்தனர். இவைகள் அதிகளவில் இரவு நேரங்களில் வேட்டையாடும் பகலில் தூங்கும் தன்மை கொண்டது. 

மரநாய் இனங்கள் மிகவும் தைரியமான விலங்குகள் ஆகும். மரநாய்கள் 4 முதல் 8 குட்டிகள் வரை ஈனும் .ஈன்ற குட்டிகளை பாசத்துடனும் பார்ததுக்கொள்வதுடன் குட்டிகளுக்கு ஆபத்து என்றல் கடுமையாக போராடவும் செய்யும் என்கின்றனர் வனத்துறையினர். 

Views: - 215

0

0