யோகாவில் புதிய ஆசனங்கள்… உலக சாதனையை நிகழ்த்தி காட்டிய திருப்பூர் மாணவன்…!!!

4 March 2021, 7:35 pm
thiruppur 1 - - updatenews360
Quick Share

திருப்பூர் : அழிந்து வரும் யோகக் கலையில் புதிய ஆசனங்களை நிகழ்த்திக் காட்டி உலக சாதனை படைத்த திருப்பூர் மாணவன்

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ரம்யா தம்பதியினரின் மகன் அர்சத் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் அழிந்து வரும் பாரம்பரிய யோகக் கலையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில், கை தசைகளில் எலும்புகளை வலுவூட்டும் வண்ணம் விருச்சிகாசனம் என்ற ஆசனத்தை தொடர்ந்து மூன்று நிமிடங்களும், முதுகு தண்டுகளை வலுவாக்கும் ஏகபாத ராஜ கபோடாசனம் என்ற இரண்டு ஆசனத்தை 8 நிமிடமும் செய்து புதிய யோகாசனங்களை நிகழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும், அழிந்து வரும் பாரம்பரிய யோகாசனத்தில் உலக சாதனை படைப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் மாணவன் கூறினார். உலக சாதனை படைத்த மாணவன் ஹர்சத்திர்க்கு பாசம் உலக சாதனை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ராமசுந்தரம், லட்சுமணன் ஆகியோர் விருது சான்றுகளை வழங்கி பாராட்டினார்.

Views: - 50

0

0