கல்லாவில் காசு இல்ல “அதுக்குனு இதை வா திருடுவே“!! வசமா மாட்டிய திருடன்!!
11 September 2020, 1:37 pmதிருப்பூர் : கோழிக்கடை கல்லாவில் பணம் இல்லாத காரணத்தால் கோழிகளை கொள்ளையடித்த திருடனை சிசிடிவி காட்சி உதவியுடன் ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூரில் கோழிகடை நடத்தி வருபவர் ராம். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்ற ராம், நேற்று காலை வந்து பார்த்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த எல்.இ.டி டிவி, ஹோம்தியேட்டர் மற்றும் கோழிகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து ராம் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று அதிகாலை இரண்டு மணியளவில் மர்மநபர் ஒருவன் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் பணத்தை தேடியுள்ளான்.
பணம் இல்லாத காரணத்தால் கடையிலிருந்த ஆறு கோழிகள், டிவி, ஹோம் தியேட்டர் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. பொருட்களை திருடிய மர்மநபர், பழைய குற்றவாளி ஆன பெருமாநல்லூர் இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 31) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து குற்றவாளியை தேடிய போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த கடைக்கு எதிர்புறமாக இருந்த காட்டுபகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கோழி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
0
0