திருப்பூரில் கொட்டித் தீர்த்த மழை : வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் மக்கள் அவதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 7:30 pm
Rain Public - Updatenews360
Quick Share

திருப்பூர் : ஒரு மணி நேரத்திற்கும் மேல் பரவலாக பெய்த மழையால், வீடுகளினுள்ளே மழைநீர் கலந்த கழிவுநீர் புகுந்ததால், மக்கள் அவதியடைந்தனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூரில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மாலை திடீரென கருமேகங்கள் சூழ இடி மின்னலுடன் மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர்., அவிநாசி., மங்களம்., உடுமலை., தெக்கலூர்., உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. இந்த மழைநீரின் காரணமாக, திருப்பூர் – குமார் நகர் 60 அடி சாலையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளில், கழிவுகள் வெளியேற முறையான வழிவகைகள் மேற்கொள்ளததால் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளில் புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Views: - 406

0

0