16 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை : போக்சோவில் இளைஞர்!!

13 September 2020, 9:51 am
tirupur Youth Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்த நிலையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

திருப்பூரை சேர்ந்த, 16 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஹரிஸ், 24 என்பவர், கடந்த, இரண்டு ஆண்டுகளாக சிறுமியிடம் பழகி வந்தார். திருமணம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக, சிறுமி கர்ப்பம் தரித்தார். சிறுமிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கடந்த மாதம், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஹரிஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் மீது ‘போக்சோ’ பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஹரிஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா இருப்பது உறுதியானது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 1

0

0