திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது : வீடுகளில் இருந்தே தீபத்தை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம்!!

29 November 2020, 7:20 pm
TVmalai Deepam - Updatenews360
Quick Share

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்திகை தீப திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது.

கொரோனா தொற்றினால் மகா தீபத்திருநாளில் கோவில்களில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்பபட்டது.

பக்தர்களுக்கு அனுமதி மறுத்தும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதனால் பக்தர்கள் நேரலையில் ஊடகம் வாயிலாக இந்த நிகழ்வை கண்டு ரசித்தனர்,

மலைக்கோவிலின் 2668 அடி உயர மலை உச்சியில் 3500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் 8 அடி உயர கொப்பரையில் ஏற்றப்பட்டது. இதையடுத்து வீட்டினில் மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும் விமர்சையாக கொண்டாடினர்.

Views: - 19

0

0