வைரலாகும் திருச்சி டிக்டாக் வீடியோ…! இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு….

Author: kavin kumar
8 February 2022, 1:43 pm
Quick Share

திருச்சி : திருவெறும்பூர் காவல் நிலையம் முன்பு டிக் டாக் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளார். அதாவது கானா பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்ப உடல் அசைவுகளை அளித்திருக்கிறார். அந்த பாடலில், ஆயுதத்தை கொண்டு தாக்க தயங்க மாட்டேன் என்றும், நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்றும் வரிகள் ஒலிக்கின்றன. இறுதியாக பின்புறம் இருக்கும் காவல் நிலையத்தை நோக்கி கை காண்பிக்கிறார்.

அதாவது, காவலர்களாக இருந்தாலும் தனக்கு அச்சம் இல்லை என்பது போல் செய்கை செய்கிறார். இந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பவர் பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் இளைஞராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.திருவெறும்பூர் காவல் நிலையம் முன்பாக எடுக்கப்பட்ட டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலானதால் போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே சம்பந்தப்பட்ட இளைஞர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கைது நடவடிக்கை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Views: - 790

0

0