மூப்பனாரின் பெயரை அழிப்பதா..? ஆட்சிக்கு வரும் முன்பே அராஜகம்..! திமுகவை விளாசிய தமாகா தலைவர் யுவராஜா..!

24 December 2020, 9:12 pm
Udhayanidhi_Stalin_Yuvaraj_UpdateNews360
Quick Share

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பாராளுமன்ற நிதியில் கட்டப்பட்ட ஒரு அரங்கத்தின் மேடையில் இருந்த அவரது பெயரை மறைத்து திமுகவினர் நடத்திய விழாவிற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா, உதயநிதியின் வருகைக்காக திமுக மேற்கொண்ட அராஜக செயலைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமாகா இளைஞரணித் தலைவர் அறிக்கை பின்வருமாறு :-

“அரியலூர் மாவட்டம் திருமானூரில் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில் அரங்க மேடை அமைக்கப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த இடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இன்று 24.12.2020 அத்தகைய அரங்க மேடையை, உதயநிதியின் வருகைக்காக, அவசர அவசரமாக பஞ்சாயத்து சேர்மன் நிதியில் கட்டியதைப் போல் மாற்றி, அரங்கத்தில் இருஙக ஜி.கே.மூப்பனார் அரங்கம் எனும் பெயரை அழித்து விட்டனர். 

எனவே ஆட்சிக்கு வரும் முன்பே அராஜகச் செயலில் ஈடுபடும் திமுகவைக் கண்டித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை தமாகா மாணவரணி மாநிலத் துணைத் தலைவர் மனோஜ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தலைமையில் மறித்து தமாகாவினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது போன்ற அராஜகச் செயலில் ஈடுபடும் திமுகவை தமாகா இளைஞரணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.”

இவ்வாறு யுவராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 22

0

0