அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி : சேலம் செல்லும் போது திடீர் உடல்நலக்குறைவு!!

Author: Udayachandran
13 October 2020, 12:37 pm
Minister Durai kannu- Updatenews360
Quick Share

விழுப்புரம் : தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் தாயாரின் மறைகக் அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து கார் மூலம் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சேலம் சென்று கொண்டிருந்தார்.

விழுப்புரம் வழியே சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பார்ககம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறலால் பாதிப்பட்டுள்ளதாக கூறும் மருத்துவர்கள், அமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியை சேர்ந்த அமைச்சர் துரைக்கண்ணு, 2006, 2011 மற்றும் 2016 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வானது நினைவுகூரத்தக்கது.

Views: - 46

0

0