இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகம்? : நாளை முக்கிய அறிவிப்பு!!

30 August 2020, 9:51 am
Bus Starts- Updatenews360
Quick Share

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்தை வரும் செப்.,1ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டள்ள பொது போக்குவரத்து சேவையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இ-பாஸ் தளர்வு எளிமையாக்கப்பட்டத்தில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

மேலும் வேலைக்கு செல்பவர்கள், வேலை தேடி வருவபவர்கள் சென்னைக்கு படையெடுக்க துவங்கியுள்ளதால் கொரோன குறைவான பகுதிகளில் பேருந்து சேவை இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வேலை தேடி செல்லும் மக்கள், பொது போக்குவரத்து இருந்தால் தான் வேலைக்கு செல்ல முடியும் என சூழ்நிலையில் உள்ள மக்கள் பொது போக்குவரத்து சேவைக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் மத்திய அரசு நேற்று பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வு அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில், மாநிலத்திற்குள்ளே மக்கள் சென்று வருவது, இ பாஸ் நடைமுறை ரத்து செய்வது போன்ற தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஞாயிறு ஊரடங்கு ரத்து, இ-பாஸ் முறை ரத்தாக உள்ளது. இது குறித்து நாளை தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது.