தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை

18 May 2021, 9:38 pm
stalin cm - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Views: - 76

1

0