மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி…! விரைவில் குணம்பெற முதலமைச்சர் வாழ்த்து

18 August 2020, 6:36 pm
Edappady 06 updatenews360
Quick Share

சென்னை: உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, முக்கிய பிரமுகர்களையும் விடவில்லை. அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரையும் தாக்கியது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் உடல்நிலை சீரடைய வீடு திரும்பினார்.

ஆனால்  கடந்த 4 நாட்களாக உடல்சோர்வு, வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. அமித் ஷா விரைவில் குணம் பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித்ஷா ஜி அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். குணம் பெற்று தனது அன்றாட கடமைகளை அவர் மீண்டும் தொடங்கி நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 28

0

0