கொரோனா தடுப்பு குறித்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு : 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!
26 September 2020, 1:19 pmகொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் கிட்டதட்ட 5 மாதம் தொடர்ந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. பின்னர் தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மெல்ல பாதிப்பு குறைந்து வந்தன. தமிழகத்தில் வரும் செப்., 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 5 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். இன்னும் சில நாட்களில் ஊரடங்க முடிவுக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் ஆலோசனையை நடத்த திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகம்எடுத்து வருகிறது. இந்தநிலையில் கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பாதிப்பு சென்னையில் தலைதூக்கிய போது, ஊரடங்கு நடவடிக்கை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து முக்கிய முடிவு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.