தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ்-க்கு கொரோனா!!

27 September 2020, 10:30 am
Gundu Rao - Updatenews360
Quick Share

சென்னை : தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ஓரளவு தொற்று குறைந்து வந்தாலும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குண்டுராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாவது, கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறும், முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0