எதுக்கும் ஆகாத தொகுதிய கூட்டணி கட்சிக்கு கொடுத்து என்ன செய்வது? திமுக மீது கே.எஸ். அழகிரி காட்டம்!!

21 January 2021, 12:47 pm
KS Azhagiri - Updatenews360
Quick Share

கோவை : வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் என்ன செய்வது என திமுகவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராகுல்காந்தி வருகின்ற 23 முதல் 25 ம் தேதி வரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பாஜக கூட்டணியை வீழ்த்த ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்றார்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிளை கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு,”வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், கூட்டணியில் எல்லோரும் பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு என்றும் கூட்டணி கட்சிகளுக்கு வெவ்வெறு வேறுபாடுகள் உள்ளது. மதச்சார்பின்மை என்றை ஒற்றை நேர்கோட்டில் கூட்டணியில் இணைந்துள்ளோம். இதுபோன்ற சிறு சிறு பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்வோம் என்றார்.

கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், கமல்ஹாசனை பீ டீம் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என கூறினார்.

வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும் என்று தெரிவித்த அழகிரி,
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது என்றார்.

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்ககூடாது என நினைக்கிறோம். மநீம மழலை கட்சி. கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது என கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது என கூறிய அழகிரி, 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது என்றார்.

ஹைதராபாத் எம்.பி. ஒவைசியின் வியாபாரம் தமிழ்நாட்டில் எடுபடாது என கூறிய அவர், கட்சத்தீவை மீட்டால் வரவேற்போம் என கூறினார்.

Views: - 0

0

0