‘டார்ச் லைட்டை பிடிக்க கை தயார்‘ : திமுகவை மிரட்டும் காங்கிரஸ்?

18 January 2021, 10:57 am
congress MNM- Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற் உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என பல்வேறு கணக்குகளை போட்டு வருகிறது.

இதே போல கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுகவுடன் இருந்த கூட்டணி கட்சிகள், திமுகவுடன் இருந்த கூட்டணி கட்சிகள் வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுகவின் ஆஸ்தான் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெறியேற நேர்ந்தால் கமலுடன் கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

No difference of opinion between DMK, Congress: KS Alagiri- The New Indian  Express

தமிழக காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தெரிவித்த கார்த்தி சிதம்பரத்தின் கருத்து திமுகவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலா அல்லது மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியா என கேள்வி எழுந்துள்ளது.

ANI on Twitter: "Tamil Nadu: Congress' Karti Chidambaram met DMK Chief MK  Stalin yesterday in Chennai.… "

புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் திமுக தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்றும் , காங்கிரஸ் கட்சி கழட்டி விடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கமல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என பதிவிட்டுள்ளார். இதனால் திமுகவில் சலசலப்பு உருவாகியுள்ளது.

What if I had been 'elected' as BCCI Secretary during UPA?' tweets Karti  Chidambaram on Jay Shah's appointment as BCCI secretary

கார்த்தி சிதம்பரத்தின் கருத்து திமுகவை மிரட்டும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்பட்டாலும், திமுக காங்கிரசை கழட்டி விட்டால் கமலுடன் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

பொங்கலன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, உதயநிதியை களத்தில் சந்தித்து விட்டு சென்றார். திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லாமல் உள்ளதால் ஸ்டாலினை சந்திக்காமல் சென்றதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Outlook India Photo Gallery - Udhayanidhi Stalin

வரும் 23ஆம் தேதி கோவை வரும் ராகுல் காந்தி திருப்பூர், கரூர், மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அங்கிருந்து மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாகவும், ஸ்டாலினை சந்திக்க திட்டம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Photo Gallery: Rahul Gandhi files nomination from Wayanad, holds roadshow  with Priyanka Gandhi | News | Zee News

காங்கிரசை திமுக கழட்டி விட்டால் டார்ச் லைட்டை பிடிக்க கை தயாராக உள்ளது என்றும் காங்கிரஸ் எம்பி கூறியுள்ளது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 6

0

0