2 லட்சத்தை நெருங்கும் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை…! கலக்கும் தமிழகம்

2 August 2020, 10:06 pm
coronavirus_updatenews360 (2)
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 5000ஐ கடந்து வருகிறது. இன்றைய தகவல்கள்படி 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று 5,517 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. நாளையோடு 2 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய எண்ணிக்கை 1,96,483 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,065 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 98 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு 4132 ஆக இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 76.27 % குணமடைந்துள்ளனர்.

Views: - 3

0

0