கொரோனா ஊரடங்கு மீறல்…! ரூ.19.42 கோடி அபராதம் இதுவரை வசூல்…!

2 August 2020, 1:54 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.19,42,72,598 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 7ம் கட்டமாக இப்போது வரும் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிறன்று தளர்வில்லாத ஊரடங்கு அமலில் உள்ளது.

இந் நிலையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.19,42,72,598 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறி உள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,288 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக இதுவரை  9,27,904 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 2,971 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,43,528 வழக்குகள் செய்யப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 2,784 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாள் வரையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.19,42,72,598 அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ரூ.7,62,520 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0