பணிந்து போன ஓ.பன்னீர்செல்வம் : இது முதல்முறையல்ல..! முழு ரிப்போர்ட்!!

By: Udayachandran
7 October 2020, 2:11 pm
OPS - updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் ஜெயலிலதா மறைவுக்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விகள் எழுந்தன.

அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் அடுத்த அதிமுக முதல்வர் யார் என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரவரின் கேள்வியாக இருந்தது. ஒரு வழியாக அதற்கான விடை இன்று தெரிந்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளரக ஓ.பி.எஸ் – ஈபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், இறுதியில் இபிஎஸ் தேர்வானார். இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இதன் பின்னணி என்ன, ஈபிஎஸ் கட்டளைக்கு ஓபிஎஸ் பணிந்தாரா என்று ஆராய்ந்தால் இது ஒரு முறை இருமுறை அல்ல, மூன்றாவது முறையாக தனது அரசியல் வரலாற்றில் ஓ.பி.எஸ் பணிந்துள்ளார்.

கடந்த 1987ஆம் ஆண்டு அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணியாக இருந்த போது, ஜானகி அணியின் வெற்றிக்கு ஓ.பன்னீர் செல்வம் பாடுபட்டார். அப்போது தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலிலதாவை எதிர்த்து நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிட்டார். நிர்மலா வெற்றி பெற தேர்தலில் களப்பணியாற்றினார் ஓபிஎஸ். ஆனால் அந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று ஜெயலிலதா வென்றார்.

இப்படி இருந்த கால கட்டத்தில் மீண்டும் ஜெயலலிதா அணிக்கு சென்ற ஓபிஎஸ் பெரியகுளத்தில் முக்கிய பொறுப்பு வகித்தார். யாரை எதிர்த்தாரோ அவருடனே பணியாற்றிய ஓபிஎஸ் ஜெயலலிதாவிடம் பணிந்தார். 2001ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அந்த ஆண்டே ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

In line with Jayalalithaa's social schemes, Panneerselvam launches 'Amma  Kalviyagam' for students | India News,The Indian Express

ஆனால் அந்த அமைச்சர் பதவி வெறும் 4 மாதங்களே அவரிடம் இருந்தது. அந்த பதவியால் அவருக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்தது. டான்சி வழக்கில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பணியாற்ற முடியாது என்பதால் முதன் முறையாக முதலமைச்சர் சிம்மாசனத்தில் ஒ.பன்னீர் செல்வம் ஏறினார். இப்படி ஜெயயலிதா இருந்த போதே இரண்டு முறை சிம்மாசனம் ஏறிய ஓபிஎஸ், ஜெயலலிதா மறைந்த போது, 3வது முறையாக மீண்டும் முதலமைச்சரானார், ஆனால் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

Hari Prabhakaran on Twitter: "OPS sent out from Delhi, DA case enquiry  started on OPS and his family, BJP kicks out OPS and 'Bellwethering'  welcome to EPS team. So OPS in search

இதன் பின், அதிமுகவில் பலமாற்றம் செய்யப்பட்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஈபிஎஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஓ.பி.எஸ். சட்டமன்றத்தில் ஈபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பிஎஸ் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். முதலமைச்சர் ஈபிஎஸ், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் என்று அதிமுக மாறியது. இப்படி தனது நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொண்ட ஓபிஎஸ், தற்போது மூன்றாவது முறையாக தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த போது, செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அணிக்கும் ஈபிஎஸ் அணிக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்த நிலையில், தனது கொள்கையில் இருந்து பின்வாங்கி இன்று முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளார் ஓ.பி.எஸ்.

Views: - 61

0

0