சென்னையை பின்தொடரும் செங்கல்பட்டு : மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்! (பட்டியல் உள்ளே)

21 August 2020, 6:29 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 5995 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5995 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1282 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 757 ஆக உள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மவாட்டங்களில் இன்று பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 101 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 5 ஆயிரத்து 764 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று 369 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும் , கோவையில் 395 பேருக்கும், கடலூரில் 242 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 200 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

No photo description available.

Views: - 28

0

0