கொரோனாவில் இருந்து குணமடைந்தார் தமிழக ஆளுநர் : மனதைரியத்தை பாராட்டிய மருத்துவமனை நிர்வாகம்.!!
14 August 2020, 7:01 pmசென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் கொரோனா சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
சிறிதளவு நோய் தாக்கம் இருந்ததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக்கொண்ட ஆளுநரை மருத்துவ குழு கண்காணித்து வந்தது.
இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரின் மன தைரியம் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக விரைவில் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.