வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து!!

21 August 2020, 10:53 am
TN Governor- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விநாயகர் சிலை வைத்து பொது ஊர்வலம் நடத்த தடை விதித்துள்ளது. மக்கள் அவரவர் வீட்டிலேயே விநாயகர் வைத்து கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Views: - 29

0

0