எரித்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.!!

12 May 2020, 6:58 pm
Villupuram Releif - Updatenews360
Quick Share

விழுப்புரம் : திருவெண்ணைநல்லூர் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இருந்து வந்த முன்விரோதம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஜெயஸ்ரீ என்பவர் இரண்டு நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முருகன், கலியபெருமாள் ஆகிய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று அந்த நிதிக்கான காசோலையை ஜெயஸ்ரீ யின் பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.