மற்றவர்களை போல வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படும் அரசு அல்ல தமிழக அரசு : அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி

Author: Udayachandran
1 October 2020, 5:12 pm
C Vijayabhaskar - updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாநிலத்தில் கொரோனா வைரஸ், டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் Post Covid Centre-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றிற்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை காரணமாக 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2ம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாநிலத்தில் கொரோனா வைரஸ், டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மற்றவர்களை போல தமிழக அரசு வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படவில்லை, மாறாக கொரோனா பெருந்தொற்று காலத்திலும் களத்திற்கு சென்று அரசு பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 38

0

0