“கடைசி கட்டத்தில் மருத்துவமனையை அணுகுவது பயனளிக்காது” : கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்துறை அட்வைஸ்..!

28 August 2020, 1:51 pm
Quick Share

மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதிக் கட்டத்தில் மருத்துவமனைகளை நாடுவது பயனளிக்காது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையும், அரசு அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும் தொற்றின் வீரியம் குறைந்தபாடு இல்லை. இந்த நிலையில், புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதத்தை சுகாதாரத்துறை செயலகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது. இது குறித்து தகவல் அளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதிக் கட்டத்தில் மருத்துவமனைகளை நாடுவது பயனளிக்காது என கூறியுள்ளார்.

மேலும், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க கடுமையாக போராட வேண்டி உள்ளது என தெரிவித்த அவர், நோய் தொற்று ஏற்பட்டார் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுப்பது சிகிச்சை அளிப்பதில் உண்டாகும் சிக்கலை தவிற்கும் என குறிப்பிட்டார்.

Views: - 0

0

0