24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 2700 பேர்…! மலைக்க வைத்த அபராதம்…!

15 August 2020, 6:50 pm
Quick Share

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை 21 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று தெரியவில்லை.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாள்தோறும் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன் வகையில், 24 மணி நேரத்தில் 676 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  ஊரடங்கை மீறியதாக இதுவரை 9,66,998 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 2,742 பேர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,75,100 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக 24 மணி நேரத்தில் 2,025 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதுநாள் வரையில், ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை ரூ.20,53,51,558  கோடியாகும். 24 மணி நேரத்தில் ரூ.9,83,980 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Views: - 30

0

0