தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காக ஸ்டாலின் “பில்டப்‘‘ : அமைச்சர் விமர்சனம்!!

10 September 2020, 7:31 pm
RB Udayakumar - updatenews360
Quick Share

மதுரை : 8 மாதமானாலும் எத்தனை மாதமானாலும் அதிமுக ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுளானாலும் திமுக கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. 8 மாதங்களில் தேர்தல் வரும் மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் தீர்ப்பு அதிமுகவிற்கு மக்கள் வழங்குவார்கள் என கூறினார்.

திமுக தற்போது எதார்த்தமான நிலையில் இல்லை. உரிமை என்று சொல்லி திமுக ஆதிகாலத்தில் உள்ளதை போன்று செயல்பட்டு வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தங்களை தயார்படுத்துவதில் திமுக மிகவும் பின்தங்கியுள்ளது. திமுக காலத்தால் பின்தங்கி மங்கிப்போய் இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் திமுக தத்தளித்துக்கொண்டுள்ளது என கூறினார்.

காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவையை அறிந்து கொள்கையை முன்வைத்து மக்களை பாதுகாப்பதிலும் உரிமையை மீட்பதிலும் அதிமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது என தெரிவித்த அவர், எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களை சோர்வடையாமல் இருப்பதற்காக முதல்வராகி விடுவோம் என கூறுவது எதார்த்தம் என்று கூறினார்.

தேர்தல் திருவிழா வரும்போது பல்வேறு கட்சிகள் வரும், காட்சிகள் வரும் ஆட்சி மாற்றம் தருவதாகவும், முன்னேற்றத்தை தருவதாக கூறுவார்கள், அதிமுக அரசு மீது பழி சுமத்துவார்கள் எந்த கட்சியும் ஆளும் கட்சியை பாராட்ட மாட்டார்கள் ஆனால் மக்கள் மட்டும் பாராட்டுவார்கள்

திமுக எந்த மக்கள் பணியிலும் ஈடுபடவில்லை என்ற எங்களது குற்றச்சாட்டை திமுக தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக விமர்சனம் செய்த உதயகுமார், கடந்த 5 மாதமாக எந்த பணியும் செய்யவில்லை என முக. ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறினார்.

Views: - 0

0

0