இன்னுமா அருமை புரியல ? சாதனை புரிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு !!
13 September 2020, 1:35 pmகோவை : மழை நீர் சேமிப்பில் சாதனை புரிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்டரில் சவால் விடுத்துள்ளார்.
தற்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மழை நீரை சேமித்து வளமாக வாழ் வேண்டும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இயற்கையோடு இயைந்த வாழ்வும் வாழ்க்கை முறையுமே நமக்கு வெற்றியைத் தரம் என தெரிவித்துள்ளார். மேலும் மழை வரும் காலத்தில் அதை சேமித்து வைப்பதும், நீரை சிக்கனமாக செலவு செய்வதும் மிகவும் அவசியமான பழக்கங்கள் என பதிவிட்டுள்ளார்-
மறுபடியும் இணைவோம் மகத்தான சாதனை புரிவோம் மழை நீரை சேமித்து வளமாக வாழ்வோம் என பதிவிட்டுள்ள அவர், மழை நீரை சேமிக்க சொல்லி மழை ‘இடித்து‘ உரைக்கிறது, இன்னுமா மழையின் அருமை புரியல என்ற வசாகம் அடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டரில் மழை நீர் சவால் விடுத்துள்ள அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பதிவுக்கு தொடர்ந்து மறுடுவிட் செய்து வலைதளவாசிகள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
0
0