அறிக்கை விட்டு கொரோனா பீதியை ஏற்படுத்தும் ஸ்டாலின் : அமைச்சர் குற்றச்சாட்டு!!

21 August 2020, 6:03 pm
Minister Talks - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : தமிழகத்தில் கொரோனா இறப்பு வெளிப்படைதன்மையுடன் தமிழக அரசு கூறிவருகிறது தேவையில்லாமல் அறிக்கை விட்டு ஸ்டாலின் பீதியை ஏற்படுத்துகிறார் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் வட்டார நாடார் இளைஞர் அணி சார்பில் காமராஜர் இலவச ஸ்கேன் பரிசோதனை மையத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபாக பாண்டியராஜன் குத்து விளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.62 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. தமிழக அரசு என்றும் அறிக்கை விட்டு ஸ்டாலின் பீதியை ஏற்படுத்துகிறார் அறிக்கை மூலம் வெறுப்பை சம்பாதிக்கிறார். நுனி பில்லை மேய்ந்து சொல்லும் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ஆழப் புரிந்து அவர் அறிக்கை விடவேண்டும் என்றார்.

அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் இல்லாது இருக்கவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை எதிர்க்கட்சிகளை மதிக்கும் அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம் என்றும் மருத்துவ குழு மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வழிபாடு செய்ய கூடாது என தெரிவித்துள்ளதாக கூறினார்.

தமிழகம் முழுவதும் அகழ்வாய்வு முடிந்த 7 இடங்களில் முடிவுகள் வருகிற 24-ஆம் தேதி முதல்வர் மூலம் வெளியிட போவதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் கூடியம் குகை மற்றும் பூண்டி அகழ்வாராய்ச்சி மையத்தை மேம்படுத்த 2 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் மத்திய அரசிடம் தமிழக அரசு 9ஆயிரம் கோடி நிதி கேட்டதில் 10 விழுக்காடு நிதி மட்டுமே தற்போது வரை வரப்பட்டு உள்ளதாகவும் ஸ்டாலின் பாராளுமன்றத்தில் போரிட்டு போதிய பணத்தை மாநில அரசுக்கு அவர்களின் உறுப்பினர்கள் 37 பேர் மூலம் பெற்றுத் தர வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை வைத்தார்.

Views: - 9

0

0