பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா : முன்னெச்சரிக்கைக்கான சமிக்ஞைகள்… எச்சரிக்கும் கமல்!!

Author: Babu Lakshmanan
3 September 2021, 7:52 pm
Kamal - updatenews360
Quick Share

சென்னை : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் சுமார் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சியின் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், செப்., 1ம் தேதி முதல் 9 வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மொத்தம் 6 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறந்து இரு தினங்களே ஆன நிலையில், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட இரண்டே நாட்களில் சில இடங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா எனும் செய்திகள் வருகின்றன. இவை நாம் இன்னமும் கவனமும் முன்னெச்சரிக்கையும் கொள்ளவேண்டும் என்பதன் சமிக்ஞைகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 396

0

0