தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் : மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு !!

14 September 2020, 10:27 am
TN Secretariat - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முதன் முறையாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.

தனிமனித இடைவெளியை காக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்முறையாக கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் கூட்டம் கூடியது. ஏற்கனவே 3 நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்தனர்.

கூட்டம் கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி கோபாலன், கு.லாரன்ஸ், ஜெமினி கே,ராமச்சந்திரன், மு.ஜான் வின்சென்ட், ஜி.காளான் உட்பட 23 பேரின் மறைவிற்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.

மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதையடுத்து நாளை காலை மீண்டும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொட

Views: - 0

0

0