தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவங்கி வைத்தார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான இணையதள சேவையை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது :- இப்பல்கலைக்கழகத்தில் 1958ல் இருந்து உயர்கல்லூரி பட்ட படிப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று 2022-23ம் கல்வி ஆண்டிற்க்கான பிஜி மற்றும் பி.எச்.டி விண்ணப்ப இணைதள சேவையை (Only Portal) துவக்கியுள்ளதாக கூறினார். இதில் மாணவர்கள் அவர்கள் என்ட்ரோல் செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போர்ட்டல் செயல்படும். அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கும் செயல்முறைகளை முடித்து கொள்ள வேண்டும். மாணவர்கள் முதலில் PC (Provisional Certificate) கொண்டு விண்ணப்பிக்கும் முறைகளை மேற்கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளவர்கள், அவர்களது டீனிடம் கடிதம் பெற்று, அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், அம்மாணவர்கள் சேரும் போது அசல் PC இருந்தால் தான் சேர முடியும்.
https://admissions at offshoot.tnau.ac.in/ என்ற இணைய முகவரி மூலம் எண்ட்ரோல் செய்து கொள்ளலாம். Mscயை பொருத்தவரை 32 programs உள்ளது. பி.எச்.டி யை பொறுத்தவரை 28 programs உள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 8 கல்லூரிகளிலும் நடத்தி வருகிறது.
ஆகஸ்ட் 11ம் தேதி என்ட்ரோல் செய்த மாணவர்களுக்கு நோட்டிபிகேசன் தந்து விடுவோம். அதனை தொடர்ந்து, இரண்டு நுழைவு தேர்வுகள் வைக்கப்படும். ஒரு நுழைவு தேர்வு ஆகஸ்ட் 27ம் தேதியும், 28ம் தேதி மற்றொரு நுழைவு தேர்வும் நடத்தப்பட உள்ளது. நுழைவு தேர்வு கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும்.
அதனையடுத்து, செப்டம்பர் 2வது வாரத்தில் மாணவர்களை முடிவு செய்து விடுவோம். 3வது வாரத்தில் மாணவர்கள் தொகை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். அதனையடுத்து, அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரி செயல்பட துவங்கி விடும். மேலும், பல்வேறு நாடுகளில் இணைந்து செயல்படுகிறோம். இங்கு பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளிலும் படிக்க மற்றும் ஆராய்ச்சிகள் செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்.
இந்தியாவில் 40 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். இதனால் ஆராய்ச்சியின் தரம் உயர்த்தப்படுகிறது. வழக்கமாக வருடத்திற்கு 400 பேர் பிஜிக்கும், 200 பேர் பி.எச்.டிக்கும் எடுப்போம். இம்முறை எவ்வித புதிய படிப்புகளும் (course) அறிமுகப்படுத்தவில்லை.
நாளை இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குளோபல் கான்பிரன்ஸை ஜூலை 19 மற்றும் 20ம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் நடத்தப்பட உள்ளது. இதனால், சிறந்த முதல் 100 மாணவர்களை கொண்டு விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்தும், தொழில் முனைவோர் ஆக்குவதற்கும் ஆலோசனைகள் வழங்க உள்ளோம். இதில் மாணவர்கள் அவர்களது படைப்புகளை விளக்கி அதில் தேர்வு செய்யப்படுவோர்க்கு தொழில்முனைவோர் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படுகிறது.
மேலும் சதர்ன் குயீன்ஸ்லாந்து உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. டீ, காபி, மாம்பழம், கரும்பு, காட்டன் களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஒரு ஆண்டு அங்கு சென்று மாணவர்கள் படிப்பர். வருடத்திற்கு 2 மாணவர்கள் அங்கு சென்று படிப்பர். இதனால் அங்குள்ள தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு இங்கு அதனை செயல்படுத்த வாய்ப்புள்ளது.
மழை பொழிவை பொருத்தவரை, கோவை மலைமறைவு பகுதியில் உள்ளதால், தென்மேற்கு பருவ மழை 4 மாதங்களுக்கு சேர்ந்து 140 மிமீ தான் மழை பொலிவு இருக்கும். அதனையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்முறையும் அதனை எதிர்ப்பார்க்கிறோம். புவி வெப்பமயமாதலால் மழை பொலிவு நாட்கள் குறையும். மழையின் அளவு குறைய வாய்ப்பில்லை, என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.