டிஎன்பிஎஸ்சி 2025 அட்டவணை வெளியான நிலையில், மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்கிறது. இதன்படி, பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று முடிந்தன.
இதில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுக்கான அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.
இதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2025, ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும். இதற்கான தேர்வு ஜூலை 13 அன்று நடைபெறும். அதேபோல், 2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (TNPSC Group 2, 2A) தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்டு, ஜூன் 15-ல் தேர்வு நடைபெறும். மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தொடர்பாக அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி, டிசம்பர் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும். மேலும், தொழில்நுட்பத் தேர்வுகள் நேர்காணல் அடிப்படையிலான ஆட்சேர்ப்பு, நேர்காணல் அற்ற ஆட்சேர்ப்பு மற்றும் டிப்ளமோ/ ஐடிஐ தரத்திலான ஆட்சேர்ப்புக்கு முறையே ஜூலை 21, ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு அறிவிப்பின்போது வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கட்-ஆஃப் குறைய வாய்ப்பு?
முன்னதாக, 2025ஆம் ஆண்டில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு நடைபெறுவது சந்தேகம் தான் என்ற கருத்து நிலவிய நிலையில், தற்போது இரு தேர்வுகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது. எனவே தான், அடுத்த முறை குரூப் 4 தேர்வு சந்தேகம் என கல்வியாளர்கள் கருதினர். அதேநேரம், குரூப் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும், குறைவான பணியிடங்களே நிரப்பப்படும் என கருதப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.