டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது.
இதில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன.
இதனையடுத்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் எழுதினர். முதலில் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இரண்டு முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
இதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி மேலும் 480 இடங்களும், அக்டோபர் 9ஆம் தேதி 2 ஆயிரத்து 208 பணியிடங்களும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது. இதனால் தற்போது மொத்தம் 8 ஆயிரத்து 932 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மேலும், அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டில எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே சூப்பரான ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!
ஆனால், மாத இறுதி ஆகியும் எந்தவொரு தகவலும் வரவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள தகவலின் படி, அக்டோபர் 30ஆம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.