தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.
விழுப்புரம்: தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், தொலைதூரப் பேருந்துகளான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் செமி ஸ்லீப்பர், ஸ்லீப்பர் வசதிகளுடன் குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
இதைத் தவிர, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளை தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கோட்ட பேருந்துகள் இயக்கி வருகின்றன. மேலும், கிராமங்களுக்குள் டவுண் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வர்.
அவ்வாறு செல்லும்போது ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் முன்பதிவு செய்யப்படும் வகையிலான பேருந்துகளும், முன்பதிவில்லா பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறைக்காக சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் ஆயிரத்து 28 பேருந்துகள் சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் சென்றுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நண்பர்களை காவு வாங்கிய கண்டெய்னர்.. இறப்பிலும் ஒன்றாக உயிரிழந்த சோகம்…!!
அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காக தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொண்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது போக்குவரத்தில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதாக உள்ளதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.