கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan30 November 2024, 10:22 am
சென்னையில் இன்று (நவ.30) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. நாள்தோறும் 50 முதல் 70 ரூபாய் வரை உயர்ந்து வந்தது. இடையிடையே 10 ரூபாய் மட்டும் குறைந்து ஆறுதல் பரிசு மட்டுமே அளித்தும் வந்தது. இந்த நிலையில், இன்றும் அப்படியான ஆறுதல் பரிசை தங்கம் தந்து உள்ளது.
இதன்படி, இன்று (நவ.30) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் கனமழை.. பாதை மாறுமா?
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 801 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமே இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.