தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
13 March 2025, 10:23 am

சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்பட்டது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold Rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 13) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இயக்குநராகும் SK பட வில்லன்.. ஹீரோ இவரா? அதிர்ச்சியில் கோலிவுட்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 858 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!
  • Leave a Reply