நிழல் இல்லாத நாள் இன்று.. ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவர்கள்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 2:12 pm
Withour Shadow - Updatenews360
Quick Share

கடக ரேகை, மகர ரேகைக்கு மத்தியில் சூரியன் வரும் போது நம்முடைய நிழல் நமக்கு 90 டிகிரியில் விழுவதால் ஒரு நிமிடம் மட்டும் பகல் பொழுதில் நிழல் தெரியாது.

இந்த நிகழ்வை நிழல் இல்லாத நாள் என அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை நிகழுவும் இந்த நிகழ்வை காண இன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இவ்வாறு நடக்கும் நிகழ்வுகளை வைத்து, கோள்களின் சுற்றளவு, எடை, சுழற்சியின் வேகம் ஆகிவற்றை அறிஞர்கள் கண்டறியப்பட்டதாகவும், ஆண்டுதோறும் நெல்லையில் இன்றும், ஆகஸ்ட் 30 ம் தேதியும் இந்த நிகழ்வை பார்க்க முடியும் என்றும் வரும் ஏப்ரல் 24 சென்னையில் நிழல் இல்லா நாள் தெரியும் என நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்தார்.

Views: - 306

0

0