தைப்பூச திருவிழாவிற்கு முதல்முறையாக அரசு விடுமுறை: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்..!!

28 January 2021, 10:02 am
thaipoosam - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முதல்முறையாக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இன்று தைப்பூசத் திருவிழாவை, முதல்முறையாக பொது விடுமுறை நாளாக அறிவித்து, இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 21

0

0