மார்ச்-05: பெட்ரோல், டீசல் விலை!!.. இன்றைய நிலவரம்..!!

5 March 2021, 7:41 am
petrol_diesel_updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் – டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப்பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது.

இதுமட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. ஏறத்தாழ கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வடைந்தது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 17

0

0