ஜன.27., மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

27 January 2021, 8:40 am
Petrol, diesel prices to go up from April 1 as IOC pumps will now sell BS-VI fuel
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 88.60 ரூபாய், டீசல் லிட்டர் 81.47 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து லிட்டர் 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 0

0

0