இன்னைக்கு பெட்ரோல் விலை இவ்வளவா?: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!

19 November 2020, 7:20 am
Click here to know why vehicles run on petrol or diesel only
Quick Share

சென்னை: மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளிடையே சற்று மனஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. 59-வது நாளாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் 49வது நாளாக எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதத்திற்கும் மேலாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.