நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் விலை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

6 May 2021, 8:10 am
Petrol Rate - Updatenews360
Quick Share

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்று 3வது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. அதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று குறைந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதியில் இருந்து தொடர்ந்து 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 92.70 ரூபாய், டீசல் லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை 3 வது நாளாக 20 காசுகள் உயர்ந்து லிட்டர் பெட்ரோல் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசு அதிகரித்து லிட்டர் டீசல் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Views: - 108

0

0